முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டிவாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி:இந்திய தேர்தல்  ஆணையத்தின் ஆணைப்படி  7-வது தேசிய வாக்காளர் தின விழாவானது நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.   அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி பேரூந்து நிலையத்தில் கல்லுரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.  பேரணி அரசு ஆண்கள் பள்ளியில் முடிவுற்றது.  அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது.  அதன் பின்பு  புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட  வாக்காளர்களில் சிலருக்கு வண்ண அடையாள  அட்டைகள்  வழங்கப்பட்டது.   மேலும், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற  கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஒவியப்போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் 7-வது தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கங்களான ‘இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல்”; மற்றும் ‘எந்த ஒரு வாக்காளரும் விடுபடகூடாது” மற்றும் ‘அனைத்து வாக்குகளும் முக்கியமானவையே” என்பவை குறித்தும் வாக்காளராக பதிவு செய்யும் நடைமுறை குறித்தும் கலெக்டர் சி.கதிரவன்  பேசினார்.  பின்னர் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இப்பேரணியானது பேருந்து நிலையத்தில் தொடங்கி அண்ணாசிலை, பெங்களூர் சாலை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.  இதில் அறிஞர் அண்ணா கல்லூரியின் மாணவ, மாணவியர்கள், அரசு பெண்கள் கலைக் கல்லூரி மாணவியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி,  கிருஷ்ணகிரி வருவாய் கோட்ட அலுவலர் முகமது அஸ்லாம், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன்,  நகராட்சி ஆணையாளர் கண்ணன்,  முதன்மை கல்வி அலுவலர் கலையரசி,  மாவட்ட கல்வி அலுவலர் அகமது பாஷா, வட்டாட்சியர்  மோகனசுந்தரம், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பூசன்குமார், பள்ளி துணை  ஆய்வாளர் ஆர்.ஜெயராமன், அரசு ஆண்கள்  மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சின்னராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago