முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடையாத்தி, நெய்வேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், இடையாத்தி கிராமம், ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி கிராமம் ஆகிய இடங்களில் வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி,  , கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   ஆகியோர் முன்னிலையில்  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை மத்தியக்குழு பார்வையிட்டு நேற்று (25.01.2017) ஆய்வு செய்தனர்.  வேளாண்மைத்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி,  , கலெக்டர் ஆ.அண்ணாதுரை,  ஆகியோர் முன்னிலையில்  காவிரி மற்றும் தெற்கு ஆறுகள் அமைப்பு  மத்திய நீர் ஆணைய இயக்குநர் (கண்காணிப்பு)  ஆர்.அழகேசன்,  மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பு செயலாளர் (திறன் மேம்பாடு) எஸ்.பி.திவாரி ஆகியோர் அடங்கிய மத்தியக் குழு பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி தண்ணீர் நம்பி விவசாயிகள் விவசாய பயிர்கள் செய்து வருகின்றனர். சம்பா பயிர் சாகுபடி செய்ய தமிழக அரசு மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது. அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும்,  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதாலும், விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் கருகியுள்ளது. இப்பயிர்களை பார்வையிடுவதற்காக காவிரி மற்றும் தெற்கு ஆறுகள் அமைப்பு  மத்திய நீர் ஆணைய இயக்குநர் (கண்காணிப்பு)  ஆர்.அழகேசன்,  மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் (திறன் மேம்பாடு) எஸ்.பி.திவாரி ஆகியோர் அடங்கிய மத்தியக் குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டும், விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.   மேலும், ஒரு முட்டை நெல் தற்போது என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை நெல் முட்டைகள் விளையும் என்றும், ஒரு ஏக்கர் சாகுபடிக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்றும், நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யலாமா என்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்பொழுது விவசாயிகள் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் பயன்படுத்தினால் உப்பு தண்ணீராக இருப்பதால் பயிர் சாகுபடி செய்ய   இயலவில்லை.  மேலும், நிலத்தடி நீர்; மட்டமும் குறைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள்.   இதற்கு மத்தியக் குழு  விவசாயிகளிடம் தெரிவித்ததாவது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகள் தங்களுடைய பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்.  மேலும், மத்திய அரசு தமிழகத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.  அதன்படி வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு  கிடைக்க குழு பரிந்துரை செய்யும். இன்றைய தினம் மத்திய அரசு விவசாயிகளுக்கான பயிர் கடன் வட்டி தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு மத்தியக் குழு விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்தனர்.           இந்த ஆய்வில் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் ம.கோவிந்தராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் ம.கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர்கள்  மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்