முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சார்ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை  பொதுஅலுவலக வளாகத்தில்   தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு    நடைபெற்ற  வாக்காளர் தின  விழிப்புணர்வுப் பேரணியை புதுக்கோட்டை சார்ஆட்சியர் எஸ்.பி.அம்ரித்,  கொடியசைத்து துவக்கி வைத்து கூறியதாவது:-              ஒவ்வொறு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி  மாவட்டந்தோறும்   மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  தேசிய வாக்காளர் தினத்தில்  தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ,வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் தேர்தலின் போது வாக்குகளை தவறாமல் பதிவுசெய்யவும் தேவையான விழிப்புணர்வை வாக்களர்களிடையே   ஏற்படுத்தும் வகையில்  பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு  வருகிறது.  அதடினப்படையில் நமது மாவட்டத்தில் நேற்று (25.01.2017) தேசிய வாக்காளர்  தின விழிப்புணர்வுப் பேரணியானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.      இப்பேரணியில்  ‘வாக்காளர் என்பதில்  பெருமிதம் கொள்வோம், வாக்களிக்க தயாராவோம், வாக்குரிமை நமது பிறப்புரிமை,  வாக்களிப்போம், ஏற்றம் பெற வாக்களிப்போம், ஜனநாயகம் தழைக்க  வாக்களிப்போம்,  வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில்  பங்கேற்று   தவறாமல்  வாக்களிப்போம்,  கண்ணியத்துடன் வாக்களிப்போம்,  உங்கள் எதிர்காலத்தின் குரல்  உங்கள் வாக்கு, மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்,  ஓட்டுக்கு பணம் பெற்றால் தண்டனை, ஒரு வருடம் ஜெயில்,  கையூட்டு பெற்று   வாக்களிக்காமல் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்,  ஜனநாயகத்தை  காத்திடுங்கள்”; ஆகிய வாக்காளர்  விழிப்புணர்வு  வாசகங்கள்  அடங்கிய  பதாகைகளை ஏந்தி  500-க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.              இப்பேரணியானது  அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி  அண்ணாசிலை,  எம்.ஜி.ஆர். சிலை,  கீழராஜவீதி, பிருந்தாவனம் கார்னர் வழியாக நகர்மன்றத்தை சென்றடைந்தது.  இதில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள், அரசு மகளிர் கலைக்கல்லூரி, மன்னர் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். இதன் மூலம் வாக்காளர்கள் அனைவரும்,  வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்கும் வகையில்  சுலபமான பதிவு, சுலபமான திருத்தம் என்பதை உணர்ந்து  18 வயது பூர்த்தியடைந்த அனைவரும்   வாக்காளர் பட்டியலில்  தங்களது பெயர்களை பதிவு  செய்து  தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் புதுக்கோட்டை சார்ஆட்சியர் எஸ்.பி.அம்ரித்,  கூறினார்.  பின்னர், புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை சார்ஆட்சியர்  இந்திய தேர்தல்  ஆணையத்தின் வாக்காளர் உறுதிமொழியனை வாசிக்க இப்பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.             இப்பேரணியில்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சாந்தி, வட்டாட்சியர் (தேர்தல்) தவச்செல்வம், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) ஜுவாசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்