பிரதமரின் நீர்பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் நவீன பாசன முறைகளை முறைகளை கற்றுக் கொள்ள குஜராத் பயனம் எம்.எல்.ஏ.பாண்டியன் வழியனுப்பி வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      கடலூர்
pandiyan mla

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் விவசாயத்துறையின் சார்பில் பாரத பிரதமரின் நீர்பாசன திட்டத்தின் கீழ் (2016-17) நவீன பாசன முறைகளை கற்றறிவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் விவசாயிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வாழ்த்தி வழி அனுப்பி பேசுகையில், பாரத பிரதமரின் இத்திட்டத்தின் கீழ் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளை சார்ந்த 17 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு  சிதம்பரத்தில் இருந்து அகமதாபாத் சென்று நவீன பாசன முறைகளை கற்க உள்ளனர். இதில் 25 ம் தேதி காலை அகமதாபாத்தில் உள்ள தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தினையும், மாலை அங்குள்ள நீர் மற்றும் நில மேலாண்மை நிறுவனத்தினையும் பார்வையிட உள்ளனர்.

அதுபோல் 27 ம் தேதி காலை ஆஹாகான் ஊரக ஆதரவு திட்டம் மற்றும் அன்று மாலை இந்திய மேலாண்மை நிறுவனத்தினையும் பார்வையிட்டு அங்குள்ள நவீன யுக்திகளை தெரிந்துகொள்ள உள்ளனர். விவசாயிகளுடன் பரங்கிப்பேட்டை வட்டார வேளான்மை உதவி பொறியாளர் சையத் முகைதீன், ஆத்மா திட்ட அலுவலர்கள் வீரமணி, மனோஜ் செல்கின்றனர் என்றார்.

விவசாயிகளை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் பரங்கிபேட்டை வட்டார வேளான் உதவி இயக்குனர் ரமேஷ், ஆத்மா திட்ட அலுவலர் ஆனந்தசெல்வி புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், நிர்வாகிகள் கனேஷ், வெங்கடேசன்,ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: