முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் தூய இருதய ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளை, கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில்,  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்   தொடங்கி வைத்தார்.

 சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் , போட்டிகளை தொடங்கி வைத்து விழாப்பேருரையாற்றினார்.

 இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் 2011ஆம் ஆண்டு தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், தமிழக உடற்கல்வித்துறையில் விளையாட்டு போட்டிகள் (குறுமையம், மையம், மண்டல, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்) சிறப்பாக நடத்திடவும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தினை மேம்படுத்தவும், ஆண்டுதோறும் ரூ.100,00,000- (ரூபாய் பத்து கோடி) ஒதுக்கீடு செய்து உடற்கல்வி துறையை மேம்பாடு செய்துள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக  தமிழ்நாடு முதலமைச்சர்  பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான (ளுபுகுஐ) விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு அரசே முழு செலவுத் தொகையையும் ஏற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற வழிவகை செய்துள்ளார்கள்.  இதற்கு முன் தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்களே தங்கள் பணத்தை செலவு செய்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.  தங்களால் பணத்தை செலவு செய்ய இயலாத மாணவர்கள் தகுதி, திறமைகள் இருந்தும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதில்லை.  ஆனால் தற்போது தகுதி பெறும் அனைத்து மாணவர்களும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று தற்போது பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.

அதுபோல மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்களை ஊக்கப்படுத்த கல்வி உதவிதொகையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய அளவிலான போட்டிகளிலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெற்று, பதக்கம் வென்றவர்கள்  முதல்வர் அம்மா  நேரடியாக வரவழைத்து தங்கள் பொற்கரங்களால் மாணவர்களுக்கு ரூ.1,20,00,000- (ரூபாய் ஒரு கோடியே இருபது இலட்சம்) வழங்கி சிறப்பு செய்துள்ளார்கள்.

சர்வதேச பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் துருக்கியில் சென்ற ஆண்டு நடைபெற்றது.  அப்போட்டியில் தமிழகத்திலிருந்து 11 மாணவர்கள் தேர்வுக்கு அழைக்கப்பட்டு 9 மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.  அனைத்து மாணவர்களுமே விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த, நாம் தேர்வு செய்த மாநில தடகள அணி வீரர்களே என்பதை குறிப்பிடுவதில் நான் பெருமை கொள்கிறேன். உடற்கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு வருடாந்திர உண்டு உறைவிட பயிற்சியும், புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ள பணியிடைப் பயிற்சி மற்றும் நடுவர் பயிற்சியும், வழங்கப்பட்டு வருகிறது.  தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு ஆண்டுதோறும் பல்வேறு சலுகைகளையும், வாய்ப்புகளையும வழங்கி வருகிறது.  இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்தார்.

இவ்விழாவில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.இராஜேந்திரன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago