முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடபயிற்சி

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

கள்ளக்குறிச்சி,

ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்ற செயல்பாடுகளில் அறிவியல் பாடம் சம்பந்தமான பயிற்சி  நடைபெற்றது. அரையான்டுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாரதியார் கவிதை நூல், திருவாசம்நூலை வழங்கினர்.

பயிற்சிக்கு ஏமப்பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஷ்ணுமூர்த்தி தலைமை வகித்தார். பாசார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனுவசான் , உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் வில்லரசன், பாலுசாமி, கமலம், கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கவிதா வரவேற்றார்.

ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்க தலைவரும் பிரிவிடையாம்பட்டு பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான ராஜேந்திரன் அறிவியல் சோதனையை எளிமையான முறையில் மாணவர்களுக்கு எடுத்துறைத்தார்.  பள்ளியில் அரையாண்டுத் தேர்வில் சிறப்பிட்டம் பெற்ற 22 மாணவர்களுக்கு பாரதியார் கவிதை நூல் மறறும் திருவாசகம் நூலையும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் அவரது சொந்த செலவில் மாணவர்களுக்கு வழங்கினார்.

 பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசுகையில்       மாணவர்கள் தங்களது அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு எதிர்கலாத்தில் விஞ்ஞானிகளா வர வேண்டும் என பேசினார்.  பாசார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனுவசன் பேசும்போது   பள்ளி பரிமாற்ற திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புற மாணவர்கள் தங்களது சிந்தனைகளை செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்று பேசினார்.   நிகழ்ச்சியில் பாசார் பள்ளி ஆசிரியர்கள் ராஜா, கமல்ஹாசன் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கமலம், அமுதா, சேசுராஜ், அரசுகுமாரி, ஐயப்பன் உளளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்