கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      கடலூர்
25KP3

கள்ளக்குறிச்சி,

தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புரணர்வு பேரணியை கோட்டாட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சண்முகநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் ராஜி, குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் ஜோதிவேல், கோட்டக் கலால் தனி வட்டாட்சியர் சையத் காதர், மண்டல துணை வட்டாட்சியர் தசரதன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்  ராஜமாணிக்கம் வரவேற்றார்.

வாக்காளர் தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களக்கிடையே நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு கோட்டாட்சியர் பரிசு மற்றும்.  வாக்காளர்களுக்கு அடையாள அட்டையினை கோட்டாட்சியர் வழங்கினார்.

பின்னர் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் அச்சிட்ட பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாகச் சென்று பள்ளியை வந்தடைந்தனர். பேரணியில் மாணவர்கள் ஆசிரியர்கள், வருவாய் ஆய்வாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பேரணி பாதுகாப்பினை கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் மு.பாண்டியன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: