முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் அகிலேஷ்யாதவால் புறக்கணிக்கப்பட்ட கவுமி ஏக்தா தளம் மாயாவதி கட்சியுடன் இணைந்தது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவால் புறக்கணிக்கப்பட்ட கவுமி ஏக்தா தளம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்தது.  சிறையில் இருக்கும் இதன் தலைவர் முக்தார் அன்சாரி உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்துள்ளது.

கிரிமினல் பட்டியலில் உள்ளார் :
உ.பி.யின் கிரிமினல்கள் பட்டியலில் இடம் பெற்றவர் முக்தார் அன்சாரி. உத்தரப் பிரதேசத்தின் மாவ் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் 1996-ல் இணைந்தார். இவர் மீது கொலை, ஆள்கடத்தல் மற்றும் மதக்கலவரம் தூண்டுதல் உட்பட பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவாகி நடைபெற்று வருகின்றன.
2009-ல் மக்களவை தேர்தலில் தோல்வி பெற்ற அன்சாரியை ஒரு கிரிமினல் எனக் கூறி ஏப்ரல், 2010-ல் தம் கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி. இதனால், கவுமி ஏக்தா தளம் எனும் பெயரில் கட்சியை துவக்கி நடத்தி வந்தார். 2012 சட்டப்பேரவை தேர்தலில் உபியின் 43 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அன்சாரிக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.மாவ் தொகுதியில் அன்சாரியும் அவரது சகோதரர் அப்சல் அன்சாரி முகம்மதாபாத்திலும் எம்.எல்.ஏ. க்களாக உள்ளனர். தன் மீதான கிரிமினல் குற்றங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரியின் கட்சி மாயாவதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி கூறுகையில், '2005-ன் பா.ஜ.க தலைவர் கிருஷ்ண ராய் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அன்சாரி மீதான கிரிமினல் குற்றம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  எனவே  அன்சாரியை எங்கள் கட்சியில் மீண்டும் இணைக்கிறேன்.
எங்கள் கட்சியில் கிரிமினல்கள் எவரும் கிடையாது. அன்சாரி அவரது இருமகன்கள் மற்றும் சகோதரருக்கு பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட வாய்ப்பளிக்கும்' எனத் தெரிவித்தார்.

கணிசமான வாக்குகள் :
கவுமி ஏக்தா தளத்திற்கு ஆதரவாக உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அன்சாரி சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக உள்ளன. இவற்றை சமாஜ்வாடி பெற முலாயமின் சகோதரர் சிவபால்சிங் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக, அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் கவுமி ஏக்தா தளத்தை சமாஜ்வாடியில் இணைத்தார். ஆனால், அன்சாரி ஒரு கிரிமினல் அரசியல்வாதி என்பதால் அவரை கடுமையாக எதிர்த்தார் அகிலேஷ். இத்துடன் முலாயமிடம் வாக்குவாதம் செய்து அடுத்த சில நாட்களில் ஏக்தா தளத்தின் இணைப்பை ரத்து செய்தார். இக்கட்சி தற்போது மீண்டும் பகுஜன் சமாஜுடன் இணைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை ஏழுகட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முஸ்லிம் வாக்குகளை குறி வைத்துள்ள மாயாவதி 101 முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் சுமார் 22 சதவிகிதம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago