முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் 68வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ப்ளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சிவானந்தம் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தலைவர் ராமதண்டபாணி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துணைத்தலைவர் சந்தோஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ்  65 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கி வரும் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் செல்லம், கவுன்சிலர் பாட்சா, லெட்சுமிபுரம் தயாளன், கள்ளிப்பட்டி முத்து,  மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்