முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் தங்களது நிலம் குறித்த தகவல்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும் : கலெக்டர் நந்தகுமார் தகவல்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட உற்பத்திக் குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர். க.நந்தகுமார், தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (27.01.17) நடைபெற்றது.

 

வேளாண்மை துறை

 

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர் தங்கள் துறைசார்ந்த திட்டஙகள் குறித்து விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின்; வருடாந்திர சராசரி மழையளவான 861 மி.மீ –ல், நடப்பு மாதம் வரை 510 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு 350 மி.மீ மழை குறைவாக கிடைத்துள்ளது. ஜனவரி-2017-ஆம் மாதம் பெய்த மழையளவு 16 மி.மீ ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை நெல் 13,000 எக்டர் இலக்கில், இதுவரை 3,248 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நெல் விதைகள் 209 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 106 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களை பொறுத்தவரை 0.425 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பயறு; 19,351 கொள்முதல் செய்யப்பட்டு 6.224 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டு திட்டத்தினை பொறுத்தவரையில் மாவட்ட கலெக்டர் அவர்களின் சீரிய முயற்சியால் 152 வருவாய் கிராமங்களுக்கும் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்கள் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறட்சி பற்றிய கணக்கெடுப்பு வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் வருவாய் துறை ஆகிய 3 துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு 70 சதவீத பணி முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30 சதவீத பணி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

 

வருகிற 31ம் தேதிக்குள்

 

விவசாயிகளின் குறைகளைக்கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டதன் பேரில் நிறைய விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். மேலும் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தங்களது நிலம் குறித்த தகவல்களையும், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குப்புத்தக நகல் ஆகியவற்றை 30.01.2017-க்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். விவசாயிகள் முறையாக பயன்படுத்திக்ககொள்ள வேண்டும் என்று கூறிய மாவட்ட கலெக்டர் இன்று விவசாயிகள் கூறிய கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில வேளாண்மை துணை இயக்குநர் சு. அய்யாசாமி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவமுத்துகுமாரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) .இராஜகோபால், தோட்டக்கலை துணை இயக்குநர் இராஜாமணி, மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago