ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      திருவள்ளூர்

திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 68-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் முனைவர் குகன் விழாவில் வரவேற்புரையாற்றி கூறியதாவது, மாணவர்களின் சிந்தனை நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் இருக்குமானால் எந்த நாட்டினாலும் நம்மை மிஞ்ச முடியாது.இனம்,மொழி,நாடு கலந்த அறிவையும்,ஒருமைப்பாடும் மிகப் பெரிய வளர்ச்சியை கொடுக்கும் என கூறினார்.கல்லூரி தாளாளர் அ.கனகராஜ் வாழ்த்துரை வழங்கியதாவது,முன்னோடிகள் பெற்ற விடுதலை வேட்கை இன்றும் நமது இளைஞர்கள் மத்தியில் இளையோடியிருக்கும் திறன் வியப்பானதும்,சந்தோசமானதாகவும் இருக்கிறது.இன்னும் மாணவர்கள் சீரிய செயல்களில் செயல் பட வேண்டும்.படிப்பிலும் கவனமாக முன்னேற முயல வேண்டும் என கூறினார்.சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் ரமேஷ்,நடிகை மாளவிகா கலந்து கொண்டு நாட்டுணர்வு குறித்து உரையாடினார்கள்.கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக குடியரசு உணர்வுகள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.கல்லூரி துணை முதல்வர் முனைவர் வி.விஜயகுமார் முன்னிலை வகித்து பேசினார். பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்ட பட்டிமன்றம் பேராசிரியர்கள் தேவி,சுதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன் விழாவினை ஒருங்கிணைந்திருந்து நன்றியுரையாற்றினார்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: