முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக மேத்யூ வடே நியமனம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      விளையாட்டு
Image Unavailable

ஜனவரி  - ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூ வடே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) ஆக்லாந்தில் தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி மாதம் 2-ந்தேதி நெய்ப்பரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி பிப்ரவரி 5-ந்தேதி ஹாமில்டனிலும் நடக்கிறது.

நேற்றுதான் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி முடித்தது. ஏற்கனவே, அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தொடர்ந்து விளையாடியதாலும், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதாலும் இந்த தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐந்தாவது போட்டியின்போது ஸ்மித்தின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 21 வயதான இடது கை பேட்ஸ்மேன் சாம் ஹீஸ்லெட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்