தருமபுரி பச்சமுத்து கல்விக்குழும தலைவர், பாஸ்கருக்கு டாக்டர் பட்டம்: மலேசிய அமைச்சர் டத்தோ கோகிலன் பிள்ளை வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      தர்மபுரி
tmp1

தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இக்கல்லூரி நிறுவனர் நினைவு நாள் விழா, பச்சமுத்து கல்வி குழும தலைவர் பாஸ்கருக்கு கல்வி சேவைபாராட்டி, இத்தாலி நாட்டின் மிலனோ பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் பட்டத்திற்கான விழா மற்றும் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.  விழாவிற்கு பச்சமுத்து கல்வி குழும தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.        கல்லூரி தாளாளர் சசிகலா பாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றினார்.  இயக்குனர்கள் பிரியா சங்கீத்குமார், இன்னிசை அரங்கநாதன் செயலர் அண்ணாதுரை, துணைத்தலைவர் சங்கீத்குமார், இயக்குனர் அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் பிலோமினா வரவேற்றார்.          தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி) மேனாள் முதல்வர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.  பட்டிமன்றம் நடந்தது.  அதைதொடர்ந்து மலேசிய மேனாள் வெளிவிவகாரத்துறை தோட்டக்கலை, தொழிற்துறை மற்றும் விலை பொருட்கள் துறை துணை அமைச்சர் டத்தோ கோகிலன் பிள்ளை, பச்சமுத்து கல்வி குழுமம் தலைவர் பாஸ்கருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.  நிகழ்ச்சியில், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க அயலக தொடர்பு குழு தலைவர் (ஞாயிறு ஓசை ஆசிரியர்) ராஜேந்திரன், ராமநாதபுரம் சமஸ்தானம் குமாரசாமி, தருமபுரி எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து  கொண்டு பரிசு வழங்கினர்.        விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகலின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.  விழாவில் மலேசிய வெளிவிவகாரத்துறை, தோட்டக்கலை, தொழிற்துறை மற்றும் விலை பொருட்கள் துறை துணை அமைச்சர் டத்தோ கோகிலன் பிள்ளை பேசுகையில் தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன் மலேசியா வந்த தமிழர்கள் கடுமையாக உழைத்தனர்.  அந்த உழைப்பால் வாழ்கையில் உயர்ந்தனர்.  பலர் தொழிலதிபராகவும், கல்வி அதிபராகவும் உள்ளனர்.  சிலரே தோட்ட தொழிலாளர்களா உள்ளனர்.  தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மூலம் இலவசமாக படிக்க வைக்கப்படுகிறது.  இந்தியாவுக்கு வரும் 85 சதவீதம் பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.  மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தை கட்டியவர்கள் தமிழர்கள்தான் என்றார்.              நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கல் திரளாக கலந்து கொண்டனர்.  முடிவில் பச்சமுத்து கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: