முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சி.கதிரவன், தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன்,   தலைமையில்  நடைபெற்றது இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்கனவே 29.12.2016 அன்று பெறப்பட்ட 144  - மனுக்களில்  139 - மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க ஏற்;கப்பட்டது. மீதமுள்ள  5 - மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 29.12.2016 அன்று பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 35 மனுக்கள் பெறப்பட்டது.அவற்றில் தோட்டக்கலை மானியம், பேருந்து நீட்டிப்பு, தேசிய வங்கி கடன், கால்நடை மருத்துவமனை கோருதல், வறட்சி நிவாரனம்;, மதகு சரி செய்தல், நீர் பகிர்மானம், கால்வாய் துர்வாருதல் ,வங்கிகள் தடையில்லா சான்று, விவசாய கடன், மழை நீர் தேக்கம் செய்தல் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு பதில் எடுத்துரைக்கப்பட்டது.  பின்பு கலெக்டர் சி.கதிரவன்,  பேசியதாவது:விவசாயின் பயன்பாட்டிற்க்கு தரமான வாழைத்திசு வழங்க வேண்டும், சிறு தாணியங்கள்  கம்பு , கொள்ளு,ராகி இவையெல்லாம் வறட்சியால் கருகி உள்ளது, வேலம்பட்டி முதல் காவேரிப்பட்டிணம் வரை பேருந்தை நீட்டித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளிர்கள் இவற்றை உடனடியாக சமந்தப்பட்ட அலுவலர்களை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுடப்பட்டுள்ளது. வறட்சி தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளிர்கள் இதுக்குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது அதுமட்டுமல்லாமல் அனைத்து கிராமத்திலும் இணை இயக்குநர் வேளாண்மை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து விடுபடாமல் உண்மையாக விவசாயிகளை கண்டைறிந்து கணக்கெடுப்பு செய்யவும், நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக பாதிப்புகளுக்குள்ளான ராகி, துவரை,கொள்ளு, நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டால் கலெக்டர் அலுவலக வலாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர எண் 04343-233009 மற்றும் 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கபடும்.மேலும் கால்நடைக்களுக்கு தீவணம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளீர்கள் இதற்;காக மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா அளவில் 7 - இடங்களில் 20 தீவன கிடங்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசின் அனுமதி பெற்றவுடன் உடனடியாக செயல்படுத்தப்படும். பெட்ட முகிளாலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு செவிலியரை பணி அமரத்துவதும் ,அவசர உறுதி 108 கேட்டுள்ளீர்கள் இதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  கலெக்டர் சி.கதிரவன்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் நரசிம்மன், மாவட்ட வன அலுவலர் இரா . ராஜேந்திரன், இணை இயக்குநர் (வேளாண்மை)     பி. சங்கரன் ,  செயற்பொறியாளர் (மின்சாரம்) நந்தகோபால்,  கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பாண்டியன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் பி.காளியப்பன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர்  ஜி.பாஸ்கர், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாய பெருமக்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago