முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் கட்டாயம் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை: கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் கட்டாயம் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லவன்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான (கி.ஊ) மு.சுந்தரமூர்த்தி வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜெயசங்கர், ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே கலந்து கொண்டு பேசுகையில், ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குடியரசு தினம் நடத்துவது, நமது நாட்டின் ஜனநாயகம், நாட்டை எப்படி வழி நடத்துவது உட்பட அனைத்து சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுவதற்கு தேர்தல் நடத்தி சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்தும் வகுக்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் கிராமங்களில் நடத்துவதற்கு காரணம் நமது மாநிலத்தில் உள்ள 7 கோடி மக்களையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து கிராம சபை நடத்த முடியாது. ஆகவே, கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருக்கும், அவர்களை ஒரு இடத்தில் கூட்டி கிரா சபை நடத்தும் போது பல்வேறு முடிவுகள் எடுக்க முடியும். கிராம சபை கூட்டம் கண்டிப்பாக நடைபெற வேண்டும். வருடத்திற்கு குடியரசு தினம் ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்டு 15, காந்தி ஜெயந்தி ஆக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்கள் கிராம சபை கூட்டங்கள் கண்டிப்பாக நடைபெறும். இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கட்டாயம் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிப்பதோடு தேவையானவற்றை கிராம சபையில் வைத்து தீர்மானம்நிறைவேற்ற வேண்டும்’ என்றார். இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் சி.பன்னீர்செல்வம், டாக்டர் புவனேஸ்வரி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஆர்.முருகன் நன்றி கூறினார்.  இதேபோல வேங்கிக்கால், அத்தியந்தல், ஆடையூர், ஆணாய்பிறந்தான் உள்பட மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் அக்டோபர் 2016 முதல் டிசம்பர் 2016 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயி;ற்சி கூடம், தாய் திட்டம் 2016-17, ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், மகளிர் திட்டம், புது வாழ்வு திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், பொது விநியோக திட்டம், குழந்தைகள் நலன் குறித்த தீர்மானங்கள், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்