முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிகாய்ச்சல் கண்டறியும் கருவி:எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட 18 வகை வைரஸ் காய்ச்சல் கண்டறியும் ரூ4.25 லட்சம் மதிப்புடைய நவீன பரிசோதனை கருவியை சு.ரவி எம்எல்ஏ திறந்து வைத்தார். இது குறித்து விவரம் வருமாறு.   வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் அரசு பொது மருத்துமனை அமைந்து உள்ளது. இந்த பொது மருத்துவமனையில் நேற்று முன் தினம் காலை சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ4.25லட்சம் செலவிலான செல்கவுண்டர் எனும் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட 18வகை வைரஸ் நோய்கள் கண்டறியும் நவீன கருவி திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.     இந்த நிகழ்விற்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜீவா தலைமை தாங்கினார். பரிசோதனை கூட பொறுப்பாளர் சுந்தராஜ் வரவேற்று பேசினார். மருத்துவர்கள் சங்கர், ரெஜினா, நாகராஜ், உமா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் செல்கவுண்டர் எனும் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட 18வகை வைரஸ் நோய்கள் கண்டறியும் நவீன கருவியை சு.ரவி எம்எல்ஏ திறந்து வைத்து பேசிய போது    ரூ4.25 லட்சம் மதிப்புடைய இந்த நவீன பரிசோதனை கருவி இல்லாமல் போனதால்; மருத்துவமனைக்கு வரும் மக்கள் பன்றி காய்ச்சல் போன்ற 18 வகை வைரஸ் நோய் கண்டறிய முடியாமல் அவதிபட்டனர். எனவே, தொகுதி நிதியில் இக்கருவி பெறப்பட்டு உள்ளது. இதுபோல் மகப்பேறு பிரிவிற்கு கூடுதல் கட்டிடம் ஒன்று அமைக்க சட்ட மன்ற தொகுதி நிதி ரூ20 லட்சமும் ஒதுக்கி இருக்கிறேன். இவ்வாறு  சு.ரவி எம்எல்ஏ பேசினார்.    அதிமுக நிர்வாகிகளான கீழ்குப்பம் முனைவர் ஏ.எல்.நாகராஜன், வட்ட செயலாளர் ஈ.மாணிக்கவேலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு முகமதுநவாஸ், பெருமூச்சி நரேஷ்காந்த், நகர எம்ஜிஆர் இளைஞரணி தாமு, வெ.பாண்டியன், வா.பாளையம், உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். பரிசோதனை கூட நுட்ப பணியாளர்கள் பிரமிளா, ஜெயலட்சுமி, முத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்