முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை அமைக்கும் திட்டம் இல்லை வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தகவல்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி

 

கூடங்குளத்தில் 6 அணு உலைகள் மட்டும் அமைக்க படும் கூடுதல் அணு உலை அமைக்கும் திட்டம் இல்லை என அணு மின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கூறினார்.

 

நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செய்தியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது ,இந்த முகாமில் சாவந்த் வரவேற்று பேசினார்,தலைமை கட்டுமான பொறியாளர் ஜெயகிருஷ்னன் ,தலைமை கண்காணிப்பாளர் ஜின்னா,நிலைய இயக்குனர் சாகு.ஆகியோர் வாழ்த்தி பேசினர், அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து பேசினார், கூட்டத்தில் அவர் பேசியதாவது-கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலை தொடர்ந்து 10 மாதம் இயங்கியுள்ளது இந்த அணு உலை இன்று முதல் (நேற்று)மீண்டும் இயங்கும்,1000 மெகா வாட் திறனுடைய 2 வது அணு உலையின் மின் உற்பத்தி கடந்த 21ம் தேதி 1000 மெகாவாட்டை எட்டியது ,இந்த அணு உலை இன்னும் ஒரு மாதத்தில் வணிக ரீதியாக மின் உற்பத்தியை துவங்கும் மிகவும் பாதுகாப்பு முறையில் கட்டப்பட்ட இந்த அணு உலையில் ஊழியர்களுக்கு ஏற்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை, 5 மற்றும் 6 வது அணு உலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் இதுவரை கையெழுத்து ஆகவில்லை , அணு உலையின் இயக்கத்தை நிறுத்த 3 வினாடிகள் போதும் ஆனால் அதை மீண்டும் இயக்க மின் உற்பத்தி பெற 72 மணி நேரம் ஆகும், இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது-கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம், அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக சிலர் ஏமாற்றுவர் மக்கள் ஏமாற வேண்டாம் தகுதி அடிப்படையில் மட்டுமே இங்கு வேலை வழங்கபடுகிறது, 3 மற்றும் 4 ஆகிய இரண்டு அணு உலைகள் 70 மாதத்தில் மின் உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கிறோம் , கூடங்குளத்தில் 6 அணு உலைகள் மட்டுமே அமைக்கபடும் கூடுதல் அணு உலை அமைக்கும் திட்டம் இல்லை இவ்வாறு அவர் கூறினார்

அணு உலையின் செயல்பாடுகள் மற்றும் அதன் நவீன திறன் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர் திருநாவுக்கரசு பேசினார்,கதிர் இயக்க பாதுகாப்பு குறித்து விஞ்ஞானி பண்டாரம் பேசினார்,சமூக விழிப்புணர்வு செயல்பாடு கமிட்டி தலைவர் ஆபிரகாம் ,செய்தி தொடர்பு அலுவலர் தேவபிரகாஷ் ஆகியோர் அனுமின் நிலையம் குறித்து பேசினர் , வேல்மயில் முருகன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்