குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் பாதுகாப்பு விழிப்புணர்வு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      கடலூர்

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இவ்விழாவில் பேராசிரியை செல்வி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் என்.சேரமான் அவர்கள் தலைமை வகித்தார்.முனைவர் பி.கதிர்வேல், துணை முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.கல்லூரி நிர்வாக குழு தலைவர் ஆர்.சட்டனாதன்,மற்றும் பொருளாளர் டி.ராமலிங்கம், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். மகளிருக்கான பாலியல் வன்கொடுமை, மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நெய்வேலி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ்வரி, காவல் நிலைய ஆலோசகர் எம்.பொற்செல்வி,வடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினார்கள். கணித துறை பி.நிர்மலா,அவர்கள் நன்றி உரையாற்றினார். பாலசுப்பிரமணியம் நுண்ணியல் துறை தலைவர் பி.சிவபாலன்,மற்றும் நாட்டு பணி திட்ட அலுவலர் கோ.வெங்கடேசன், பேராசிரியை சிந்துஜா,ஆகியோர் விழா ஏற்ப்பாடுகளை செய்தனர்.இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: