கலசபாக்கம் அரசு பள்ளியில் 492 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo05

 திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளி, கடலாடி அரசு மேநிலைப் பள்ளி, லாடவரம் அரசு மேநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்க, பள்ளி தலைமை ஆசிரியர் சி.ஜோதி அனைவரையும் வரவேற்றார். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தமிழக இந்து சமய அறநிலையததுறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் 125 பேருக்கும், கலசபாக்கம் அரசுபெண்கள் மேல்நிலப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 109 மாணவிகளுக்கும் மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 142 மாணவ மாணவிகளுக்கும் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கும், லாடவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 63 மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 492 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் வணிக வரித்துறை உறுப்பினர் கே.ராஜன், கூட்டுறவு ஒன்றிய மாநில தலைவர் அமுதா அருணாசலம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, தண்டராம்பட்டு நிலவர வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், மாவட்ட வேளாண் பொறியியல் துறை கூட்டுறவு சங்க தலைவர் எல்.என்.துரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ.சிவக்குமார், வேளாண் உயர்மட்டக்குழு தலைவர் டி.சந்திரகுமார், உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இதேபோல திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் 689 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: