முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு முகாமில் 426 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை:அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கலெக்டர்சி.அ.ராமன்,  தலைமை வகித்தார். இம்முகாமில் கலந்து கொண்டு வேலை நியமனம் பெற்ற 426 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி  வழங்கினார்கள். இதனை தொடர்ந்து 9 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பிலான கடனுதவி தொகையும், 2015-16 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட 5 பயனாளிகளுக்கு ரூ.17 இலட்சம் மதிப்பில் இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளும்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் (பொ) பெ.பெரியசாமி  வரவேற்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில்  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர்  பேசியதாவது:-     தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2537 வேலையற்ற இளைஞர்கள் பதிவு செய்து அதில் 426 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. இந்த முகாமில் பிரபலமான 32 நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளன.  மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2ம் கட்டமாக 4 ஊராட்சி ஒன்றியங்களிலும், 3ம் கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 528 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் அம்மா  2011 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிட்டார்கள். அதன்படி 2014-15 ஆம் ஆண்டில் நடைபெற்ற 6 வேலைவாய்ப்பு முகாம்களில் 7589 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டதில் 78 பிரபல முன்னனி நிறுவனங்களில் 1510 இளைஞர்கள் வேலைவாய்ப்ப பெற்று பயனடைந்துள்ளனர். 2015-16 ஆம் ஆண்டில் நடைபெற்ற 4 வேலைவாய்ப்பு முகாம்களில் 5474 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டதில் 89 பிரபல முன்னனி நிறுவனங்களில் 1141 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.         இது போன்று நல்ல பல அரிய வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை அளித்துவருபவர் மறைந்த  தமிழக முதல்வர் அம்மா . இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற இயலாமல் போனவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் வருங்காலங்களில் நடைபெறும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டுமென  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி  பேசினார்.இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கோபி  நன்றியுரையாற்றினார்கள்.இந்த முகாமில் திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.க.ப.கார்த்திகேயன், ., திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.நல்லதம்பி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் செல்வம், திருப்பத்தூர் நகர கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டி.டி.குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்