மறைந்த முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறைக்கு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது:அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி புகழாரம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      சேலம்
1

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அம்மாப்பேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (28.01.2017) மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி  வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர்வா.சம்பத், தலைமையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் பேசியதாவது. புரட்சித்தலைவி அம்மா  உலக தரத்திலான கல்வியை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் பெற வேண்டும்  என்ற உயரிய நோக்கத்தோடு, அதிக அளவிலான நிதியினை ஒதுக்கி கற்றல் உபகரணங்கள் அனைத்தையும் விலையில்லாமல் வழங்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கல்வியின் தரம், தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாணவ, மாணவியர்களுக்கு 1,19,972 விலையில்லா மிதிவண்டி ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டிற்கு 28,804 விலையில்லா மிதிவண்டிகள் ரூ.9.32 கோடி மதிப்பீட்டில் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. இது தவிர நடப்பாண்டிற்கு மாணவ, மாணவியர்களுக்கு 25,595 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்கள் நல திட்டங்களும் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி படிக்கும் மாணவ, மாணவியர்கள் உரிய நேரத்தில் வகுப்பிற்கு செல்லவும், பள்ளி முடிந்தவுடன் உரிய நேரத்தில் வீடு திரும்பவும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்மை திட்டமாக விளங்கி கொண்டிருக்கிறது. மாணவ, மாணவியர்கள் தடையில்லாமல் கல்வி கற்க வேண்டும் என்ற உண்ணத நோக்கத்தோடு இந்த விலையில்லா மிதிவண்டிகள் புரட்சித்தலைவி அம்மா  வழங்கியுள்ளார்கள். புரட்சித்தலைவி அம்மா  தாயுள்ளத்துடன் ஆண்டு ஒன்றிருக்கு ரூ.5.50 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி தாயாக விளங்கி வருகிறார்கள். இத்திட்டம் உயிரோட்டமுள்ள திட்டமாக இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் ரூ.14,000 மதிப்பிலுள்ள விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் இவ்விழாவில் 2,343 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.76 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி மாணவ, மாணவியர்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா  அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வரும் திட்டங்கள் மூலம் முழுமையாக பயனடைந்து, சிறந்த முறையில் கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு   பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி  பேசினார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் பயிற்சி அருண், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் சங்கரநாராயணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெலிக்ஸ், வட்டாட்சியர் லெனின் தலைமையாசியர் கே.மதியழகன், பள்ளி மாணவ, மாணவியர்கள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: