முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.ஆர்.சிபழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியல் சிறார்களின் சிந்தனைத் திருவிழா

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு யு.ஆர்.சிபள்ளியில் சவால்களைச் சாதனையாக்கும் விழாவாகச் சிறார்களின் சிந்தனைதிருவிழாகொண்டாடப்பட்டது.

 

     பள்ளிமாணவர்கள் வாழ்க்கைமேம்பாட்டிற்கானகலைகளாக,தானேதைத்தசொக்காக்கள, பைகள, கழிவுபொருள்களிலிருந்துஆக்கப் பொருளாகமாற்றியப் பொருள்கள,பெண்கள் அணியும் அணிகலன்கள, உணவுபதார்த்தங்கள் ஆகியவைவிற்பனைப்பொருட்களாகவைத்துகடைகள் நடத்தப் பெற்றுவியாபாரநுணுக்கங்களைஆர்வத்துடன் வெளிக்காட்டினர். இயற்கைஉரங்களால் விளைவிக்கப்பட்டகாய்கறிகள் மற்றும் பூக்கள்,கீரைகள் இவைகள் இயற்கைஅங்காடியில் வைத்துஅதன் முக்கியத்துவத்தைமாணவர்கள் உணர்த்தினர்.இக்காலத்தில் உடலுக்குக்கேடுதரும்  விரைவுஉணவுநடமாடும் வேளையில் இயற்கைஉணவின் மகத்துவமும, நவதானியங்களின் மகிமையும்,  இந்தஉணவால் உடலுக்குக்கிடைக்கும் ஆரோக்கியமும் குறித்து,மாணவர்கள் சிந்தனைவிழாவில் கலந்துகொண்டவர்களுக்குஅறிவுறுத்தி,நலவாழ்வுவாழவழிகாட்டினர். இதைப் பார்த்தபெற்றோர்கள் பெருமகிழ்ச்சிஅடைந்தனர். மற்றும் பழையநாணயங்களின் தொகுப்புகளைவைத்துஅவற்றின் முக்கியத்துவத்தையும்,பழமையையும, வரலாற்றையும் அறிவிக்கும் விதமாகமாணவர்கள் கூறியவிதம் பெற்றோர்களைக்கவர்ந்தது.மற்றும் அன்றாடவாழ்வில் கணினிமற்றும் கணிதம் செயல்பாட்டுமுறையும, புயல் மற்றும் புயலினால்ஏற்படும் தாக்கல்கள் குறித்தும் விழிப்புணர்ச்சியைஏற்படுத்தும்வகையில் அவர்களதுஉரை இருந்தது.

 

     “ஆலயம் இல்லாதஊருக்குஅழகுபாழ்”என்றபழமொழிக்கேற்பஆலயங்களின்அற்புதங்கள்,தமிழ்நாட்டின் சிறப்புவாய்ந்த இடங்கள் இவற்றைபற்றியசெய்திகளின் தொகுப்புஅருமை.கண்காட்சியில் இரத்தக்குறிப்புபரிசோதனையும்,டி.என் .எபரிசோதனையும் மற்றும் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் விதம் குறித்தவிழிப்புணர்வும் ‘மழைநீர்மண்ணின் உயிர்நீர்’என்பதைவலியுறுத்திநீர்சேகரிப்புமுறையைச் சொல்லிக்காண்பித்தமுறையும்நன்று.  பழங்காலமக்களின் பண்பாட்டுஉணவினைமண் பாண்டங்களில் சமைத்துஉண்பதின் முக்கியத்துவத்தைமாணவர்கள் விளக்கினர்.வீட்டுத் தோட்டம் இல்லாதவர்களாலேயும் வீட்டுமாடியில்கூட தோட்டமிட்டும்,தானியங்களைவிதைத்தும் பூச்செடிகள் வைத்தும் காய்கறிகள் நட்டும் இயற்கைவளத்தைப்பெருக்கலாம் என்றும் மாணவர்கள் தெளிவுப்படுத்தினர்.

 

     நிகழ்ச்சியின் தொடக்கமாகயு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் தலைவர்பெரியம்மாதுளசியம்மாள் அவர்களால் சிறார்களின் சிந்தனைத் திருவிழாதொடங்கிவைக்கப்பட்டது.  யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் துணைத்தலைவர்உயர் சி. கனகசபாபதி யு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் தாளாளர்கே .சரஸ்வதியு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் உறுப்பினர்களும்  மற்றும் பள்ளிமுதல்வர் நிர்வாகஅலுவலர், இருபால் ஆசிரியர்களும்,மாணவர்களும, மாணவத் தன்னார்வத் தொண்டர்களும் விழாவினைஉற்சாகப்படுத்தும் விதமாகச்செயல்பட்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.

 

              கலைத்திறன் போட்டிகளானவிளையாட்டுப் போட்டிகளிலும்,பாட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டுவெற்றிபெற்றபெற்றோர்,பெரியோர்மற்றும் மாணவர்களுக்குப் பள்ளித்தலைவர்பெரியம்மா பரிசுகள் வழங்கிசிறப்பித்தார். இத்துடன் சிறார்களின் சிந்தனைத் திருவிழாமாணவர்களின் சிந்தனையைவெளிப்படுத்தும் விதமாக இனிதேநிறைவுற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்