முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் பல்வேறு கடைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பான விற்பனை நிறுத்தம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோட்டில் பல்வேறு கடைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர்பான விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு கல்லூரி நிர்வாகத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாணவ–மாணவிகள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

பாரம்பரிய உணவு மற்றும் கலாசாரங்களுக்கு தமிழர்கள் திரும்ப வேண்டும் என்ற மனமாற்றத்தை மாணவ–மாணவிகளின் தொடர் போராட்டம் ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, உடல்நலத்துக்கு கடும் கேடு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது.இதற்கு ஆதரவு தெரிவித்து மாணவ–மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் குறிப்பிட்ட குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்று அதனை சமூக இணையதளங்கள் வழியாக பரப்பினார்கள். இதைத்தொடர்ந்து பல்வேறு வணிகர் சங்கங்களும் வெளிநாட்டு குளிர்பான வகைகள், உயிர் மற்றும் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் வெளிநாட்டு உணவு வகைகளை விற்பனை செய்யமாட்டோம் என்று அறிவித்தனர்.

 

அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் உள்ள கடைகளில் குறிப்பிட்ட நிறுவன குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதுபோல் ஈரோட்டில் ஒரு சில கல்லூரிகளில் உள்ள உணவு விடுதிகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்த கல்லூரி நிர்வாகத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்