முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பாரதியார் பல்கலைக்கழக அளவிலான கலைத்திறன் போட்டி கோவை என்.ஜி.பி. கல்லூரி சாம்பியன்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பல்கலை. அளவிலான கலைத்திறன் போட்டிகள்  நடைபெற்றன.

கல்லூரி இளநிலை வணிக மேலாண்மைத் துறை, வணிக மேலாண்மைத் துறை (கணினி பயன்பாடு) ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்தின.

  இப்போட்டியை கொங்கு தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதில் விநாடி வினா, சந்தைப்படுத்துதல், தனிநபர் நடனம், குழு நடனம், ஓரங்க நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

  இப்போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், அதிக புள்ளிகளைப் பெற்ற கோவை என்.ஜி.பி. கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. சித்தோடு வாசவி கல்லூரி 2-ஆவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கவிஞர் கவிதாசன் பரிசு வழங்கினார்.

  பரிசளிப்பு விழாவில், அறக்கட்டளைப் பொருளாளர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், கலை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, கல்லூரி முதல்வர் என்.ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்