முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழையார்-புதுப்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 801 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியம், பழையார்-புதுப்பட்டினம் கிராமத்தில்; சுனாமியால் பாதிக்கப்பட்ட 801 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

 

போர்க்கால நடவடிக்கை

 

வீட்டு மனைப் பட்டாக்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி தெரிவித்ததாவது,

"2004 ம் ஆண்டு சுனாமி எனும் பேரிடரை தமிழகம் சந்திதத போது, புரட்சித் தலைவி அம்மா அரசு அலுவலர்களை முடுக்கி விட்டு, சுனாமியால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வீடு, உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, உணவு, உடையின்றி தவித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், போர்க்கால அடிப்படையில் செய்திட அறிவுறுத்தினார். இதன் மூலம் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இந்த போர்க்கால நடவடிக்கையினை பார்த்து உலகமே வியந்தது. இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவர்களது நிரந்தர வாழிடத்தை உறுதி செய்யும் வகையில், புரட்சித் தலைவி அம்மா சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சேர்ந்த வீடற்ற ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்கள், முப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்களில் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்கள் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 1976-ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புத் சட்டத்தின்படி விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழக அரசால் தொடர்ந்து வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அரசு வீட்டுமனைப் பட்டாக்களை பொதுவாக பெண்களின் பெயரில் வழங்கிட உத்தரவிட்டார்கள்.

பொதுவாக மாநகராட்சிப் பகுதியில் 1 செண்ட் நிலமும், நகராட்சி பகுதியில் 1.5 செண்ட் நிலமும், பேரூராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் 3 செண்ட் நிலமும் வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருpறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 9560 பட்டாக்களும், 2014-15 ஆம் ஆண்டில் 6049 பட்டாக்களும், 2015-16 ஆம் ஆண்டில் 11698 பட்டாக்களும் என மொத்தம் 27,277 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் (2016-17) நாளது தேதி வi 3852 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிராமங்களையெல்லாம் நகரமாக மாற்றும் அளவிற்கு தமிழக அரசு எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கி, அக்குழுக்களுக்கு கடன்களை வழங்கி, பெண்களை ஒருங்கிணைந்து செயல்படவைத்து தமிழக அரசு பெரும்புரட்சி செய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடைக்கோடி மக்களுக்கும் எல்லா வசதிகளையும் பெறும் வகையில் திட்;டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது..

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது." என தெரிவித்தார்.

விழாவில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சுபாநந்தினி, வட்டாட்சியர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்