முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் தட்டம்மை ரூபெல்லா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் தட்டம்மை ரூபெல்லா குறித்து பத்திரிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

 

தட்டம்மை, ரூபல்லே

 

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. குழும இயக்குநர் மக்கள் நல இயக்கம் தரேஷ்அகமது. , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர்(மணப்பாறை), எம்.செல்வராஜ்(முசிறி), பரமேஸ்வரி(மண்ணச்சநல்லூர்), பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர்.கே.குழந்தைசாமி , மருத்துவ கல்வித் துறை இயக்குநர் டாக்டர்.நாராயணபாபு, கி.ஆ.பெ. மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.லில்லிமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தட்டம்மை ரூபெல்லா குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக அம்மாவின் அரசு தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா மக்கள் நல்வாழ்வுத்துறையில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அதற்காக பெங்ளுரில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் எண்ணற்ற சாதனைகள் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தட்டம்மை ரூபெல்லா என்ற தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் முதல் கட்டத்தி;லேயே தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சிறப்பு முகாம் 2017 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவக்கப்பட்டு ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது.

10 மாதம் முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு முதல் தவணையும் 16 மாதம் முதல் 24 மாதங்களில் இரண்டாம் தவணையும் தட்டம்மை தடுப்பூசி வழக்கமாக வழங்கப்படுகிறது. ஆனால் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி நோயை கட்டுப்படுத்த வழங்கப்படும். ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். எந்தவொரு குழந்தையும் விடுபடாவண்ணம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மலைப்பகுதிகள், மாநகர குடிசைப் பகுதிகள், கட்டிடப் பணி புரியும் பிற மாநில மக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் முழு வீச்சில் வெற்றியடைய கல்வித்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை, சமூக நலத்துறை, உள்ளாட்சித்துறை, தொழிலாளர் நலத் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை போன்ற துறைகளுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயல்படும். மேலும் தேவையான ஊழடன – ஊhயin களை ஏற்படுத்துவதற்கும், எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் தயாரான நிலையில் உள்ளனர்.

 

வேண்டுகோள்

 

நேற்று(28.01.2017) திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்படும் பத்திரிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முக்கியகாரணம் இந்த புதிய தடுப்பூசி திட்டத்தை பொதுமக்களிடம் எடுத்து செல்வதற்கும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் பத்திரிக்கையாளர்களின் பங்கு இன்றியமையாததாகும். எனவே இந்த நிகழ்வு பத்திரிக்கையாளர்களுக்கான மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி இன்றியமையாதாகும். எனவே இந்த நிகழ்வு பத்திரிக்கையாளர்களுக்கான மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்புதிய திட்டத்தை மக்களிடம் எடுத்து செல்வதற்கும் திட்டம்; வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் பத்திரிக்கை துறையினர் தங்கள் ஒத்துழை;பபை நல்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.அனிதா, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.கருணகரன், நிலைய மருத்துவ துணை அலுவலர் டாக்டர்.சித்ரா, முன்னாள் துணை மேயர் ஜே.சீனிவாசன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகரன் உட்பட மருத்துவ உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்