முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் இணைந்து நடத்திய ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், யாதவா பெண்கள் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், தலைமையில்  நடைபெற்றது.

தமிழகத்தில் நகரப்பகுதி இளைஞர்களுக்கு நிகராக ஊரக பகுதி இளைஞர்களும் அதிக அளவில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் தமிழ்;நாடு அரசு இலவசமாக பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் மூலம் 2016-17ஆம் ஆண்டில் ஏழு வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. அதில் முதலாவதாக மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 2,192 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் 760 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, இரண்டாவதாக வாடிப்பட்டி தாய் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1800 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் 550 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மூன்றாம் வேலைவாய்ப்பு முகாம் கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதி ஊரக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில்; சுமார் 1,733 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் 478 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

     இன்று அதன் தொடர்ச்சியாக, நான்காம் வேலைவாய்ப்பு முகாம் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதி ஊரக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற்றதில் இதில்; சுமார் 844, இளைஞர்கள் கலந்துகொண்டனர். 23க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களின் மூலம் 160 இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பயனடைந்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 15 இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் அருண்மணி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ்பாபுநாத் மங்களம், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago