விஐடியில் பள்ளி மாணவர்களுக்கான கணித திறன் போட்டி:பேராசிரியர் பழனியப்பன் பரிசு வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      வேலூர்
vit

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  பள்ளி மாணவ மாணவிகளுக்கான கணித திறன் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் முனைவர் பழனியப்பன் நல்லப்பன் ரூ.46 ஆயிரம் ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். போட்டியில் வாலாஜா பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு  ஒட்டு மொத்த சாம்பியனுக்கான சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. கணித மேதை ராமானுஜரை போற்றும் விதமாக அவரது நினைவாக விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களிடையே கணித திறனை உருவாக்கும் வகையில் மாநில அளவில்  கணித போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி 21வது ஆண்டாக கணித போட்டிகள் நடத்தப்பட்டது. விஐடியின் ஸ்கூல் ஆப்  அட்வான்சுடு சயின்சின் கணித துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநில முழுவதும் 32 பள்ளிகளை சேர்ந்த 1,692.  மாணவ மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு கணிதத்தில் வினாடி வினா, திறன் போட்டி, கணித மாடல்கள் உருவாக்குதல், கட்டுரை போட்டிகள் நடத்தபட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா விஐடியில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி ஸ்கூல் ஆப் அட்வான்சுடு சயின்ஸ் டீன் முனைவர் ஆர்.விஜயராகவன் வரவேற்றார்.பள்ளி மாணவர்களுக்கான கணித திறன் போட்டி பற்றி விஐடி கணித துறை தலைவர் முனைவர் ஜி.நடராஜன் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்முனைவர் டி.எழில் மாறன்ஆகியோர் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கு விஐடி இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கணித பேராசியர் முனைவர் பழனியப்பன் நல்லப்பன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று விஐடி மாணவர் கணித சங்கத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கணித போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ரூ.46 ஆயிரம் ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் வாலாஜா அரசு மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு ஒட்டு மொத்த சாம்பியனுக்கான சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் பி.வி.சத்யநாராயண நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: