முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் இன்று மனிதநேய வார நிறைவு விழா:அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பங்கேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று மாலை மனித நேய வார நிறைவு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பரிசுகள் வழங்குகிறார். திருவண்ணாமலை நகராட்சி மகளிளர் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை  3 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்க, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார். இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெ.ஏழுமலை ஆர்.வனரோஜா, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை முன்னாள் இயக்குநர் கே.ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மு.பெ.கிரி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மாநில தலைவர் அமுதா அருணாசலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.கனகராஜ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை விபவன்குமார் சார் ஆட்சியர் பிரப சங்கர் கோட்டாட்சியர உமாமகேஸ்வரி மாவட்ட ஊர கவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட வன அலுவலர்கள் எஸ்.சுதா, தன்னப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிதம்பரம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.ரவி, ஆட்சியரின் நேர்மக உதவியாளர் (பொது) நா.குணசேசகரன், தாசில்தார் சி.பன்னீர்செல்வம், மற்றும் சமூக நீதி மன்றம் மனித உரிமைகள் கமிட்டி உறுப்பினர்கள், கொத்தடிமை தொழிலாளர் நல கமிட்டி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வுள்ளனர். இந்த விழாவையட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதி மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழச்சிகள் நடைபெறவுள்ளது. விழா முடிவில் தனி வட்டாட்சியர் நா.தீர்த்தமலை நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆதிதிராவிடர் மறறும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன், மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்