முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மகாகும்பாபிஷேகத்தையட்டி நாளை யாகசாலை பூஜைகள் தொடக்கம்:400 சிவாச்சாரியார்கள் பங்கேற்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6ந் தேதி நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தையட்டி நாளை (செவ்வாய்கிழமை)  யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. இதில் 16 ஓதுவார்கள் 125 வேத விற்பனயர்கள் 400 சிவாச்சாரியார்கள் மொத்தம் 541 பேர் கலந்து கொள்கிறார்கள். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகத்தின் ஆரம்பமாக சனிக்கிழமையன்று கணபதி பூஜை நடந்தது. நாளை 31ந் தேதி (செவ்வாய்கிழமை) யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. அதையட்டி கங்கைநதியில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6ந் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதையட்டி அண்ணாமலையார் கோவில் மலர் அலங்காரம், மின் அலங்காரங்களால் விழாக்கோலம் காட்சியளிக்கிறது. கும்பாபிஷேகத்தின் ஆரம்பமாக நேற்றுமுன்தினம் அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் மகா கணபதி பூஜை, ஹோமம், நடந்தது. அப்போது சம்பந்த விநாயகருக்குதங்க கலசம் அணிவிக்கப்பட்டு அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கோசாலை பசு, கோவில் யானை ருக்கு, மற்றும் குதிரைகளுக்கு கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜைகள் நடந்தன. இரவு பிரவேச பலி பூஜை, ஹோமம் நடந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான 108 யாக சாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது. 54ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்மான யாக சாலையில் அதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. யாகசாலை பூஜைகளை நிறைவேற்றும் பணியில் சுமார் 500 சிவாச்சாரியார்கள் ஈடுபடவுள்ளனர். அதைத் தொடர்ந்து வரும் 2ந் தேதி கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள பிரவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 6ந் தேதி காலை 9.05 மணி முதல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். இந்த  நிலையில் மகா கும்பாபிஷேகத்தில் பயன்படுத்துவதற்காக ரிஷிகேஷ் பகுதியில் கங்கை நதியில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் யமுனை காவிரி உள்ளிட்ட நதிகளிலிருந்தும் புனித நீர் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணியளவில் கோவில் பிரிம்ம தீர்த்தத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் புனித நீரை எடுத்து கங்கை உள்ளிட்ட பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள புனிதநீருடன் சேர்க்கப்பட்டு யாகசாலைகளில் புனிதநீர் நிரப்பி யாகசாலை பூஜையில் வைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்