பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணுகாரம்பட்டி மற்றும் அகரம் ஆகிய இடங்களில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்:அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      தர்மபுரி
3

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணுகாரம்பட்டி மற்றும் அகரம் ஆகிய  இடங்களில அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதை  உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.பி. அன்பழகன்  நேற்று (29.01.2017) திறந்து வைத்து தெரிவித்ததாவது :-               தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 66 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு ரூ. 8432.96 இலட்சம் மதிப்பிலான பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது பள்ளிகள் செயல்பாட்டிலும், இதில் 3 பள்ளிகளுக்கான கட்டடப் பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையிலும்,  11 கட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையிலும், 31 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10 அரசு பள்ளிகள் நிதி பெற்றவுடன் கட்டுமானப் பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், அதேபோல் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட 3 மாதிரிப்பள்ளிகள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கட்டிடங்கள் திறப்பதற்கு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலக்கோடு மாதிரிப் பள்ளி கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில்  உள்ளது.  ரூ. 705 லட்சம் மதிப்பிலான 3 மகளிர் விடுதிகள் கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது விடுதிகள் செயல்பாட்டில் உள்ளது. 84 கூடுதல் வகுப்பறைகள் ரூ.706 இலட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது வகுப்பறைகள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 27 ஆய்வக கட்டிடங்கள் ரூ. 230.31 இலட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது ஆய்வகங்கள் செயல்பாட்டிலும், 34 கழிவறை வசதிகள் மாணவ, மாணவியர்கள் ரூ. 34.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது எனவும், 26 குடிநீர் வசதிகள் ரூ. 13.00 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளன. 2016-2017ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கண்ணுகாரம்பட்டி மற்றும் அகரம் அரசு உயர்நிலைப் பள்ளிகளாகும்.  மேலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ரூ. 2 கோடியே 40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.            துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவும்,  நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும் மற்றும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி அனைத்து கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் படிக்கின்ற சூழலை உருவாக்கி தந்தவர்  மறைந்த தமிழக முதல்வர் அம்மா  தான். ஆற்றில் தண்ணீர் வந்தால் அகரம் - மாரண்டஅள்ளிக்கு போக முடியாமல் இருந்த சூழலை மாற்றி தற்போது அகரத்திலேயே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் எற்படுத்தப்பட்டுள்ளது. இதை மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள்  நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கென்று தனி கவனம் செலுத்தி அனைத்து ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன்  தமிழக முதலமைச்சர் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கென்று                    ரூ. 24,130 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சிகளில்  மாவட்ட கல்வி அலுவலர்  ராஜசேகரன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்  சுப்ரமணி,  பாலக்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர்   எம். பழனிசாமி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: