முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால் நடை மருந்தகங்களை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பேவநத்தம், பெட்டமுகிளாலம் மற்றும் நாட்றாம்பாளையம் ஆகிய கிராமங்களில் துணை மருந்தகங்கள் செயல் பட்டு வந்த நிலையில் தற்போது  தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களை  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர்சி.கதிரவன் , நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். கால் நடை பாராமரிப்புத் துறை அமைச்சர்  பேசும் போழுது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக 73 கால்நடை மருந்தகங்கள், ஓசூரில் 1 பெரு  கால்நடை மருத்துவமணையும்,  காவேரிப்பட்டினம் மற்றும் பர்கூரில் 2 மருத்துவமனைகளும்,  மற்றும் 13 துணை கால் நடை மருந்தகங்கள் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில்   தமிழக முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக, பேவநத்தம், பெட்டமுகிளாலம், நாட்றாம்பாளையம், பண்ணந்தூர், உப்பாரப்பட்டி மற்றும் ஆலப்பட்டி ஆகிய 6 துணை  மருந்தகங்கள் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்றொன்றிக்கு  ஒரு மருந்தகத்தில் 15 ஆயிரம் கால்நடைகளுக்கு  முதலுதவி சிகிச்சையாக கருவூட்டல், தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கல், ஆண்மை நீக்கம், மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி  போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது  தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள கடை கோடி மலை கிராமங்களான பெட்டமுகிளாலம், பேவநத்தம், மற்றும் நாட்றாம்பாளையம்  ஆகிய கிராமங்களில் கால் நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளுக்கு உயர் தரமான சிகிச்சைகள் பெறும் வகையில்  இந்த தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்கள் உதவுகிறது. ஆகவே விவசாயிகளும் மற்றும் கால் நடை வளர்ப்போர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கால் நடைகளை நோய் தாக்க வண்ணம் இருக்க அவ்வப்போது கால் நடை மருந்தகங்களை அணுகி கால் நடைகளுக்கு சிகிச்சை அளித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என  கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்  இணை இயக்குநர் ( கால்நடை பாராமரிப்புத் துறை) மரு.விஜயகுமாரன், உதவி இயக்குநர் மரு.மணிமாறன், மருத்துவர் மாதேஸ்,   தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தேன்கனிக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்