தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
2

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம்  தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் வீடியோ படக்காட்சிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியில்  தமிழ்நாடு முதலமைச்சராக புரட்சித் தலைவி அம்மா  6-வது முறையாக பதவியேற்றவுடன் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து 5,780 கோடி விவசாய கடன் ரத்து, கட்டணமின்றி 100 யூனிட் மின்சாரம், நெசவாளர்களுக்கு கட்டணமின்றி 200 யூனிட் மின்சாரம், தாலிக்கு 1 பவுன் தங்கம், 500 மதுக்கடைகள் மூடல் கோப்புகளில் முதலில் கையொப்பமிட்ட  புகைப்படங்களும், மேலும் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சியினை சந்தைக்கு வருகை தந்த பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.       இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: