முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திலேயே சேலம் மாவட்ட ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியில் முதன்மையாக விளங்குகிறது:அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      சேலம்

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கச்சுப்பள்ளியில்  கால்நடை கிளை நிலையத்தை கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி  துவக்கி வைத்தார்கள். இவ்விழா கலெக்டர்வா.சம்பத்,   தலைமையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்  முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்  பேசியதாவதுபுரட்சித்தலைவி அம்மா  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக 2016-17ம் ஆண்டிற்கு தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் செயல்பட்டு வந்த 100 கால்நடை கிளை நிலையங்களை ரூ.9.93 கோடி மதிப்பில் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தி செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த கோரிக்கையினை ஏற்று இன்றைய தினம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கச்சுப்பள்ளி கால்நடை கிளை நிலையத்தினை கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பைத்தூர், நரசிங்கபுரம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மேற்குராஜாபாளையம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், விலாரிபாளையம் ஆகிய 5 கால்நடை கிளை நிலையங்களை தரம் உயர்த்தி கால்நடை மருந்தகங்களாக செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.       புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு எப்போதும் விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும் வகையில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்திட ஏதுவாக ஆங்காங்கே கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்துவதுடன் நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் கால்நடை மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அம்மா அவர்களின் அரசு எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் ஆவின் பால் உற்பத்தியில்  முதன்மையாக விளங்கி கொண்டுள்ளது. 1992-96ஆம் ஆண்டு ஆவின் நிறுவன பொறுப்பில் நான் இருந்த போது, சேலம் ஆவின் நிறுவனம் இந்தியாவிலேயே முதல் பரிசு பெற்றது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கிறது.     புரட்சித்தலைவி அம்மா  கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தமிழகத்திலுள்ள அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை வளர்போர் இந்த கால்நடை மருந்தகத்தினையும் நல்லமுறையில் பயன்படுத்தி மேன்மேலும் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.     இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்சிலி ராஜ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ராஜதுரை, உதவி இயக்குநர் புகழேந்தி, சிறப்பறிஞர் தேவேந்திரன், வட்டாட்சியர் சண்முகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago