முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவர்கள் எழுப்ப இது தருணமல்ல: ட்ரம்ப் மீது ஈரான் அதிபர் பாய்ச்சல்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

டெக்ரான் : நாடுகளிடையே சுவர்கள் எழுப்ப இது சரியான தருணமல்ல என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அகதிகள் கொள்கை மீது விமர்சனம் செய்துள்ளார்.

தெஹ்ரானில் இது குறித்து ரூஹானி கூறியதாவது:

பெர்லின் சுவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை அவர்கள் மறந்து விட்டனர். நாடுகளுக்கிடையே சுவர்களை எழுப்பும் நேரம் இதுவல்ல சுவர்கள் இருந்தால் அவற்றை அகற்றும் காலமாகும் இது.

உலக நாடுகளுடன் அணு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு ஈரான் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கதவுகளை திறந்துள்ளது. இந்நிலையில் ட்ரம்பின் விசா தடை உத்தரவு வரவேற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளார் ரூஹானி.

அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான ஈரானியர்கள் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ட்ரம்பின் விசா தடை உத்தரவினால் பல குடும்பங்கள் ஈரானிலும் அமெரிக்காவிலும் கவலையடைந்துள்ளன.

விசா தடையை எதிர்த்து ஈரானின் புகழ்பெற்ற நடிகை தாரானே அலிதூஸ்தி ட்வீட் செய்த போது, “ஈரானியர்களுக்கு ட்ரம்பின் விசா தடை நிறவெறித்தனமானது. இந்தத் தடை உத்தரவுக்கு பண்பாட்டு நிகழ்வுகள் விதிவிலக்காக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த மாதம் அங்கு நடைபெறும் அகாடமி விருதுகளை நான் புறக்கணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்