முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான இடம் தேர்வு அமைச்சர்கள் வேலுமணி, பாண்டியராஜன் ஆகியோர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட நேரு விளையாட்டு அரங்கம் அருகில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்  அவர்கள் தலைமையில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள்,  பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் புதிய உள்விளையாட்டரங்கம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தெரிவித்ததாவது,

           பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் பேசுகையில்,

           அம்மா அவர்களின் அரசு விளையாட்டுத்துறைக்கு தனிக்கவனம் எடுத்து அனைத்துப்பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைத்து ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்கள் பெறுகின்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தியது மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையில்  அம்மாவின் அரசு விதி 110ன் கீழ் கோயம்புத்தூருக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குரிய முதற்கட்டப்பணியாக நகரின் மையப்பகுதியில் சுமார் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாநகராட்சி இடம் தேர்வு செய்யப்பட்டதை இன்று பார்வையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைந்து பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நீச்சல் குளம், வாலிபால், டென்னிச், அத்லெட்டிக்ஸ் மற்றும் பல்வேறு உள்ளரங்கு விளையாட்டுக்கள்  விளையாட்டுகளுக்கேற்ப உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதுடன் விடுதி வசதியும் அமைக்கப்படவுள்ளது. இதன் நோக்கம் மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளை கற்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்பதேயாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை எப்பொழுதுமே விளையாட்டிற்கு அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள் அதனை மேலும், விரிவுபடுத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.

          பின்னர் நேரு விளையாட்டு அரங்கில் விடுதியில் தங்கி பயிற்சி பெற்றுவரும் மாணவர்களிடம் ஆலோசனை வழங்கும் பொழுது,  அம்மா அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் பெற ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும்படி, நல்ல உடல் ஆரோக்கியம் போதிய அளவு பயிற்சி, விடா முயற்சி இம்மூன்றையும் நிலைப்படுத்தி முயற்சி மேற்கொண்டால் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கில் சாதனை படைக்கலாம் முதலில் பயிற்சி பெறுமுன் சாதனையாளர்கள் எவ்வாறு வெற்றிபெற்று வருகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அவர்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு அவர்களைப் போல் நாமும் கையாண்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும் அதற்கு பயிற்சியாளர்களும், மாணவர்களை ஊக்கப்படுத்தி மாணவர்களின் மனநிலையறிந்து செயலாற்றிட வேண்டுமென அறிவுரை வழங்கினார். அதேபோல் தேசிய அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. அதில் பங்கு பெற்று வெற்றி பெற்றாலே ஒவ்வொருவரும் ஒரு நிலையை எட்டிவிடலாம் அதை ஊக்கப்படுத்திடும் வகையில் முதல் பரிசு 5லட்சம், இரண்டாம்பரிசு 3லட்சம், மூன்றாம் பரிசு 1லட்சம் என வழங்கப்படுகிறது. இப்போட்டியானது நவம்பர் 2017ல் நடைபெறவுள்ளது. இப்பொழுதே மாணவர்கள் தொடர் முயற்சி எடுத்தால் வெற்றியை எளிதாக பெற்றுவிடலாம். அதேபோல் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் அதிகளவு கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் விளையாட்டு மைதானங்களில் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகிறது அதனை நல்ல முறையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனையாளர்களாகி உலக அளிவில் தமிழகத்திற்கும்  அம்மாவிற்கும் பெருமை தேடித்தரவேண்டும் என   பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்தார்.

 நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவிக்கையில்,

 அம்மா அவர்களின் அரசு கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதுமே தனிக்கவனம் எடுத்துக்கொண்டு கேட்கும் திட்டங்கள் அனைத்தையுமே உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள் அதனடிப்படையில் சட்டப்பேரவையில் விதி110ன் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு புதிய உள்கட்டமைப்புடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி வழங்கியதுடன் நிதியையும் உடனே வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்று அமைச்சர் அவர்களுடன் பார்வையிட்டு பணியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் கோய்புத்தூர் பகுதிக்கு கோவைப்புதூர், மற்றம் நகரின் மற்றொரு பகுதியிலும் புதிய விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைத்ததையும் பரிசீயலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்குரிய பணிகளும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது அமைக்கப்படவுள்ள உள் விளையாட்டரங்கிர்கு ஒதுக்கீடு நிதி போதாது என்றால் அதற்கும் கூடுதல் நிதிவழங்க பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இது மட்டுமின்றி  அம்மாவின் அரசானது மாநகராட்சியின் அதீத வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மேற்கு புறவழிச்சாலை ரூ.300 கோடி மதிப்பில் அமைக்க உத்தரவிட்டு அதிவேகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல் உக்கடம் பகுதியில் பாலம் அமைக்க ரூ.85 கோடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.90 கோடி நிதியொதுக்கீடு வழங்கி அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டு தற்போது இருதயம் அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுச்சிறுநீரக அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கி மருத்துவமனை சாதனைபடைத்துள்ளது. இதன் மூலம கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளையும் மிஞ்சி விட்டது என்ற அளவிற்கு அனைத்து திட்டங்களையும்  அம்மாவின் அரசு வழங்கி வருகிறது என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்தார்.

பின்னர்,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள்,  பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ம.ப.பாண்டியராஜன் அவர்கள் ஆகியோர், அரசு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டு அதன் தன்மைகுறித்து கேட்டறிந்ததுடன், கொங்கு நாட்டு வரலாற்றை அனைத்துப்பகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக ரூ.2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டு அதற்குரிய இடமும் தேர்வு செய்யப்பட்டு அங்கு பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளன. அதேபோல் இங்கு ஒரே இடத்தில் எல்லோரும் ஒரு இடத்தில் அனைவரும் காணும் விதமாக அகல்வாய்வு அருங்காட்சியகமும் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்கள்.

தொடர்ந்து, மாவட்ட மைய நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், குழந்தைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் என தனித்தனியாக பார்வையிட்டு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அமைத்துக் கொடுப்பதுடன், மேலும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென  அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வீ.சிஆறுகுட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, விளையாட்டுத்துறை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன், கீதாஞ்சலி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டான்லி பி.மேத்யூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்