முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் நியாவிலைடைமற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி, கோபி ஊராட்சி ஒன்றியம் கூகலூர் பேரூராட்சி தண்ணீர்பந்தல்புதூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 இட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைகடை, பொலவகாளிபாளையம் ஊராட்சி பிச்சாண்டாம்பாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் என மொத்தம் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அவர்கள் இன்று (29.01.2017) திறந்து வைத்தார்.

 

          இந்நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளார்கள். அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இன்று ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நியாயவிலை கடை இன்று முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 இலட்சம் ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் சிறப்பாக செயல்படும்.

 

மேலும் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இல்லாமை என்ற நிலையை போக்கும் வகையிலும் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஏழை, எளியோர் பயன்பெரும் வகையில் பசுமை வீடு திட்டத்தை செயல்படுத்தினார். அதன்படி ரூ.2.10  இலட்சம் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கி வீடுகள் கட்ட திட்டம் வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். குழந்தைகள், வளரிளம் பெண்கள், மாணவ, மாணவியர்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் என அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை மறைந்த   தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் வழங்கியுள்ளார்கள். மேலும் அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்ற சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என கூறினார்.

 

தொடர்ந்து  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அவர்கள் அந்தியூர் சட்டமன்ற தொகுதி, கோபி ஊராட்சி ஒன்றியம் பொலவகாளிபாளையம் ஊராட்சி பிச்சாண்டாம்பாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில்,  ஈரோடு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் செல்வி.பிரியங்காஆலா, செல்வி.அங்கர் லேதர், அபிஷேக் மீனா, டி.எஸ்.சேத்தன்,  மாவட்ட  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.ராமசாமி, மாவட்ட  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் டாக்டர்.கே.பி.தேவராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய துணைத்தலைவர் வி.ஏ.சுப்பிரமணியம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்