கூடலூர்_பந்தலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      நீலகிரி

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து நீலகிரி மின்பகிர்பான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

                                  உப்பட்டி

உப்பட்டி, அத்திப்பள்ளி, சேரம்பாடி மற்றும் கூடலூர்   துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று(30_ந் தேதி) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி உப்பட்டி துணை மின்நிலையத்தைச் சார்ந்த உப்பட்டி, பொன்னானி, தேவாலா, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் புரோக் மற்றும் நம்பர் 3 டிவிஷன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களிலும்,

அத்திப்பள்ளி துணை மின்நிலையத்தைச் சார்ந்த முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கார்குடி, தேவர்சோலா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களிலும்,

                                கூடலூர்

சேரம்பாடி துணை மின்நிலையத்தைச் சார்ந்த  சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன் சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரா, கக்கண்டி, சோலாடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களிலும்,

கூடலூர் துணை மின்நிலையத்தைச் சார்ந்த கூடலூர், நந்தட்டி, மரப்பாலம், சூண்டி, செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களிலும்,

மின் விநியோகம் இருக்காது என நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் ஜெ. கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: