முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்பாறையில் வயது முதிர்ச்சி காரணமாக தொற்று நோய் ஏற்ப்பட்டு பெண் யானை உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      நீலகிரி
Image Unavailable

வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறை காப்பி எஸ்டேட் 28-ஆம் நம்பர் காட்டில் காப்பி தோட்டத்திற்கு நேற்று முன்தினம் காப்பி பழங்களை பறிக்க தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வால்பாறை வனச்சரகர் சக்திவேல் வனத்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையைப் பார்த்தனர். அப்போது இரவு நேரமாகிவிட்டதால் பிரேத பரிசோதனை செய்யமுடியாமல் திரும்பி விட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதிக்கு சென்று வனச்சரகர் சக்திவேல் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் டாக்டர் மனோகரன் பிரேத பரிசோதனை செய்து. இறந்து கிடந்த யானையின் உடல் பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இது பற்றி வனச்சரகர் சக்திவேல் கூறும் போது இறந்து கிடந்த பெண் யானைக்கு சுமார் 40 வயத்துக்கு மேல் இருக்குமென்றும் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் தொற்று நோய் ஏற்பட்டு இறந்துள்ளதாகவும் கூறினார். பின்பு அப்பகுதியிலேயே பிரேத பிரிசோதனைக்கு பிறகு குழி தோண்டி புதைக்கப்பட்டது. மேலும் வால்பாறை பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதாலும் வனப் பகுதிகள் மற்றும் எஸ்டேட் வனச்சோலைகள் காய்ந்து கிடப்பதாலும் யானையின் உடலை தீயிட்டு எரித்தால் காட்டுத் தீ பரவுவதற்கு வாய்ப்பு ஏற்ப்படும் என்பதால் யானையின் உடலை புதைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago