முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளிகளில் கற்றல் பரிமாற்ற கல்விப்பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      காஞ்சிபுரம்

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தமிழக அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 பள்ளிகள் பயன் பெறுகின்றன. இதில் உத்திரமேரூர் 1 முதல் 3 வார்டுகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், காஞ்சிபுரம் கலெக்டர் காலனி அரசு உயர்நிலை பள்ளியும் இத்திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றன. பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியை சேர்ந்த 6,7,8 வகுப்புகள் பயிலும் மாணவர்களில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இரு வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் ஒவ்வொரு பள்ளியிலும் 6 நாட்கள் வீதம் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

 

தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல், என ஐந்து பாடங்களுக்கு நாளொன்றாக ஐந்து நாட்களும் ஒரு நாள் படைப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியும் திட்மிடப்பட்டு பள்ளிகளுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் தொடங்கிய இப்பயிற்சி பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வர உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் நகர்புற மற்றும் கிராமப்புற பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பான வேனில் பயணம் செல்வதுடன் களப்பயணம், செயல்திட்டம், களஆய்வு, மேற்கொள்கின்றனர்,

 

இதன் மூலம் தமது பள்ளி சார்ந்த பகுதியின் கலாச்சார சிறப்புகள், பள்ளி மேலாண்மை, நிர்வாகம், கல்வி செயல்பாடு, சார்ந்த பல்வேறு கருத்துகளை பரிமாறி புதிய கற்றல் உத்திகளை பள்ளிகளில் கடைபிடிக்கின்றனர். புத்தகத்தை தாண்டிய கல்வியோடு வகுப்பறையை தாண்டிய கல்வியாக சகோதர உணர்வு சமூக பழக்கவழக்கங்களை மேலோங்க இப்பயிற்சி வழிவகுக்கிறது.

 

அண்மையில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய 1 முதல் 3 வார்டு பள்ளியின் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பயிற்சியை சிவகுமார் பார்வையிட்டு சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சு.சந்தானலட்சுமி பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர்கள் உ.கமலவள்ளி, ஆர்.அரங்கநாயகி செயல்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்