முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவூர் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.

 

சுகாதார நிலையம்

 

உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது....

ஆவூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் இன்று முதல் செயல்படுகிறது.திருவாரூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 43 ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகர்பகுதியில் 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆவூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் திருவாரூர் மாவட்டத்தில் 48 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (அம்மா ஆரோக்கிய) முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் 45 ஆயிரத்து 679 பயனாளிகள் முழு உடல் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளார்கள்.முழு உடல் பரிசோதனை திட்டத்தில் மாநிலத்தில் 13 வது இடத்தில் திருவாரூர் மாவட்டம் உள்ளது. முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு திட்டத்தில் 6 ஆயிரம் மக்பெறு நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்ததை தற்போது 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருவது புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசாகும். பொதுமக்கள் அனைவரும் ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக பயன்படுத்தி வாழ வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ட்டி.மோகன்ராஜ், இணை இயக்குநர் மரு.அசோகன், துணை இயக்குநர் மரு.செந்தில் குமார்.வருவாய் கோட்டாச்சியர் முத்துமீனாட்சி, வட்டாட்சியர் சொக்கநாதன், அவளிவநல்லூர் சங்கர், ஆவூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago