முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி கருங்குளத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு : கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி முன்னிலையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், கருங்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு பாரம்பரியம் மிக்கது. இதன்படி கருங்குளத்தில் மந்தையில் நேற்று (29.01.2017) காலை 9.00 மணிக்கு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது.

சீறிய காளைகள்

திருச்சி மாவட்டகலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கருங்குளத்தில் பாரம்பரிய மிக்க ஜல்லிக் கட்டு விதிமுறைகளின்படி நடைபெற்றதா என நேரில் பார்வையிட்டார்கள். இதில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, அரியலூர், சேலம், சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 402 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துக் கொண்டனர். கால்நடைத்துறையின் மருத்துவக்குழுவினர் அனைத்துக் காளைகளும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்தனர். இதே போன்று மருத்துவ பரிசோதனையில் தகுதி பெற்ற 342 வீரர்கள் மட்டுமே சீருடைகளுடன், காளைகளை அடக்க களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது. களம் இறங்கிய பல காளைகளுடன் வாலிபர்கள் களத்தில் நீண்ட நேரம் நின்று சீறி வந்த காளைகளை அடக்கினார்கள். இதில் காளைகளை அடக்கும் போது சிறுகாயம் ஏற்பட்ட 2 வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையும், 5 வீரர்களை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

கலெக்டர் பேட்டி

 

கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு முடிந்தபின்னர் கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தமிழக அரசு மேற்கொண்ட பெரும் முயற்ச்சியின் காரணமாக புதிய சட்டத்தின் படி பல்வேறு நெறிமுறைகளின் அடிப்படையில் மிக நல்லமுறையில், கருங்குலத்தில் ஜல்லிக்கட்டு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பொது மக்கள் பங்களிப்பு, காளைகள் கொண்டு வந்த விவசாயிகள், பார்வையார்கள், மாடுபிடி வீரர்கள் என அனைவரும் முழு ஒத்தழைப்பு அளித்தனர். காவல் துறையின் சார்பில் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் அரசின் கோட்பாடுகளுக்கு, நெறிமுறைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்கியதன் காரணமாக 100 சதவீதம் நல்ல முறையில் ஜல்லிக் கட்டு நடைபெற்றது. எனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு அணைத்தும் சிறிதும் பிறலாமல் நல்ல முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள், விவசாய பெருமக்கள், காளைகளின் விவசாயிகள், பார்வையார்கள், கிராம பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் விழா குழுவினர்கள மற்றும் காவல் துறை, வருவாய் துறை, விலங்குகல் நலவாரிய பிரதிநிதிகள் பொதுப்பணிதுறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் என அணைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்கிறேன் என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்.க.தர்ப்பகராஜ், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏஜி.ராஜராஜன், மாவட்ட ஆட்சித் தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ரமேஷ், மணப்பாறை காவல் துறை கண்காணிப்பாளர் ஜி.வனிதா, கால்நடை பராமரிப்பு துறை இணைஇயக்குநர் டாக்டர் இராஜேந்திரன், உதவி இயக்குநர் டாக்டர் முருகேசன், கால்நடை பல்கலைக்கழக பேராசியர் ரிச்சர்டு, கால்நடை பராமரிப்பு துறை மணப்பாறை வட்டாட்சியர் ராஜேந்திரன், மற்றும் வருவாய்த்துறை, விலங்குகல் நலவாரிய பிரதிநிதிகள் பொதுப்பணிதுறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் விழா குழுவினர்கள் உட்;பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்