முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கடலையூர் பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அர்பணிப்பு
சுதந்திர போராட்ட தியாகிகள் 36 பேர் நினைவாக கடலையூரில் செங்குந்தர் பள்ளிகள்வரலாற்று சிறப்புடன் இயங்கிவருகின்றன. இதற்காக குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் உள்ள செங்குந்தர் துவக்கப்பள்ளி மற்றும்உயர்நிலைபள்ளிகளில் புதியதாக ரூ.3 லட்சம் செலவில் புதிய காம்பவுண்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்குஅர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் குடியரசு தின விழா ஆகியவை நடந்தது. பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனமருத்துவ அதிகாரி டாக்டர் கைலாசம் வாழ்த்திபேசினார். ஸ்டெர்லைட் நிறுவன பொதுமேலாளர் குமாரவேந்தன் தேசிய கொடியேற்றிவைத்து பேசினார்.மேலும் அவர் புதிய சுற்றுச்சுவர் கட்டிடத்தை பள்ளிகளுக்கு அர்ப்பணித்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் நட்டார், மாவட்டபொறுப்பு கல்வி அதிகாரி சின்னராசு,ஸ்டெர்லைட் நிறுவன சமுதாய வளர்ச்சிப்பிரிவு மேலாளர் சுகந்தி செல்லத்துரை ஆகியோர்முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் பீட்டர், தலைமையாசிரியர்கள் பா.தென்றல், இரா.முருகன்ஆகியோர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சோலைசாமி, குருசாமி மற்றும் கடலையூர் அரிமா சங்க தலைவர் வரதராஜன் உள்ளிட்டபலரும் மாணவ மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்