மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் சி.வி.சண்முகம் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,ஜன

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் அடிப்படைவசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் ஞாயிறு அன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் அடிப்படி வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லை என கூறி செஞ்சி நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொது நலவழக்கில் செஞ்சி நீதி மன்றம் விழாக்கள் மற்றும் ஊஞ்சல் உற்சவம் தடை பிறப்பித்தது. இதனைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து நீதி மன்றத்தில் தாக்கல் செய்து மேலும் அடிப்படை வசதிகளை காலஅவகாசம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து நீதி மன்றம் இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது மேலும்  3 மாதத்திற்குள் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதனை தொடர்ந்து வெள்ளி இரவு அமாவாசைஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் அங்காளம்மன் கோயிலில் உள்ள அடிப்படை வசதிகாளன குடிநீர், கழிப்பிடம், மற்றும் தங்கும் விடுதி, பாதுகாப்பு ஏறஅபாடுகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறை சேவூர் ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கோயிலில் ஆய்வு செய்தனர். குடி நீர்வசதிகள் மற்றும்கழிப்பிட வசதிகள்குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து நேரில் பாரிவையிட்டனர்.

ரூ 58 லட்சம் மதிப்பில் அமைய உள்ள பஸ்  நிலையத்திற்கான இடத்தை பார்வையிட்டடார். மேலும் குடிநீர், கழிப்பிட வசதிகளையும், பக்தர்கள் தங்கும் விடுதியையும் கூடுதலாக ஏற்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவு ஆணையர் பிரகாஷ், அற்ஙாகவலர் குழு தலைவர் ஏழுமலை,  மேல்மலைனூர் அதிமுக ஒன்றிய செயலர் ஆர்.புண்ணியமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, கோயில் மேலாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: