முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானியர்களுக்கு டிரம்ப் விசா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் : இம்ரான் கான் பிரார்த்தனை

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தானியர்களுக்கும் டொனால்டு டிரம் விசா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக இம்ரான் கான் கூறிஉள்ளார்.

3 மாதங்களுக்கு நிறுத்தம்
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் கடந்த 27-ம் தேதி, உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை. சிரியா அகதிகள், குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்கிற வரையில், அதாவது மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்காவினுள் நுழைய முடியாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமா-லியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடு-களை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தம்.

கடும் அதிருப்தி
இந்த நாடுகளில் தூதரக ரீதியிலான ராஜ்ய விசாக்களுக்கு மட்டும் தடை இல்லை என்று அதிரடி உத்தரவை வெளியிட்டார். டிரம்பின் இந்த அதிரடி உத்தரவுகள், சர்வதேச அரங்கில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. உள்நாட்டிலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

வெள்ளை மாளிகை தகவல்
டொனால்டு டிரம்ப் உத்தரவை அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையங்களில் மேற்கொள்ள தொடங்கிய நிலையில் போராட்டம் வெடித்தது. இவ்விவகாரம் நீதிமன்றம் சென்றது, டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. டொனால்டு டிராம்பின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கை பூதகரமாகிய நிலையில் பாகிஸ்தானும் தடை பட்டியலில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியது, இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் வெளியாகியது.

இம்ரான் கான் பிரார்த்தனை
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான், பாகிஸ்தானியர்களுக்கும் டொனால்டு டிரம் விசா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறிஉள்ளார்.   லாகூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாகிவால் பகுதியில் தனது கட்சி கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் டொனால்டு டிரம்ப் கட்டுப்பாடுகளை விதிப்பார் என்றே நம்புகின்றேன்.

நாட்டை வளர்ச்சி அடையச் செய்யும்
டொனால்டு டிரம்பின் இந்த நகர்வானது பாகிஸ்தானியர்கள் அவர்களுடைய தாயகத்தை வளர்ச்சியடைய செய்ய உதவும். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தலைவலி என்றாலும் கூட உடனடியாக அமெரிக்காவிற்கு சென்றுவிடுகிறார். பாகிஸ்தானிர்களுக்கு அமெரிக்கா தடை விதித்தால் நவாஸ் செரீப்பும் பாகிஸ்தான் மீது கவனம் செலுத்துவார், பாகிஸ்தானும் வளர்ச்சியடையும் என பேசிஉள்ளார். 

கோழைகள் கிடையாது
நாமும் டொனால்டு டிரம்பிற்கு பதிலடியை கொடுப்போம் (பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் பிரவேசிக்க தடைவிதிப்போம்) என்றும் இம்ரான் கான் பேசிஉள்ளார். இந்தியா உடனான நட்புறவு தொடர்பாக இம்ரான் கான் பேசுகையில், “மோடிக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகின்றேன் நவாஸ் செரீப் போன்று பாகிஸ்தானியர்கள் எல்லோரும் கோழைகள் கிடையாது என்பதை. பாகிஸ்தான் அமைதியான நாடு, பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்றே இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கூறுவார்கள்,” என்று கூறிஉள்ளார். ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் குழந்தைகள் பின்னால் மறைந்து கொள்கிறார் எனவும் இம்ரான் கான் விமர்சனம் செய்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago