முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் ‘விசா’ தடை பட்டியலில் பாகிஸ்தான் வெள்ளை மாளிகை தகவல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா தடை பட்டியலில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

‘விசா’ வழங்க தடை
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஈராக், ஈரான், லிபியா, சூடான், ஏமன், சிரியா மற்றும் சோமாலியா ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதித்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கவே இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த தடையை நீக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானும் ...
இந்த நிலையில் விசா தடை பட்டியலில் பாகிஸ்தானும் பரிசீலனையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இத்தகவலை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ரின்ஸ் பிரிபஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும் போது, 7 முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக டிரம்ப் ‘விசா’ தடை உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளார். அது போன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் விசா தடை விதிப்பது குறித்த முடிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தீவிர பரிசீலனைக்கு பிறகே...
அமெரிக்க வரலாற்றில் பாகிஸ்தான் மீதான இத்தகையை நடவடிக்கை முதன் முறையாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 7 நாடுகள் மீதான விசா தடைக்கு பலமுறை தீவிரமாக பரிசீலித்த பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்