முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகதிகளுக்கான தடை விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசுவேன் :கனடா பிரதமர்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

டொரண்டோ - அகதிகளுக்கான தடை விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசுவேன் என்றும், அமெரிக்காவில் வெளியேற்றப்படும் அகதிகள் தங்கள் நாட்டுக்கு வருமாறும் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூ வரவேற்ப்பு தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு தடை
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ‘விசா’ தடைவிதித்துள்ளார். அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் திரண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடா எதிர்ப்பு
டிரம்பின் இக்கொள்கையை கனடா எதிர்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடியூ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், டிரம்பின் இத்தகைய நடவடிக்கை தீவிரவாதம் மற்றும் போருக்கு ஒப்பானது. அமெரிக்கா அகதிகளை நிராகரித்து அங்கு செல்பவர்களை வெளியேற்றுகிறது. ஆனால் அவர்களை கனடா வரவேற்கிறது.

விமர்சனம் இல்லை
நீங்கள் (அகதிகள்) எங்கள் நாட்டுக்கு வாருங்கள். மேலும் அகதிகள் பிரச்சினை குறித்து விரைவில் அமெரிக்கா செல்லும் நான் அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசுவேன் என்று ஜஸ்டின் டிருடியூ தெரிவித்துள்ளார். மேலும் மெக்சிகோ மீது அதிபர் டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் விமர்சனம் செய்யவில்லை. ஏனெனில் கனடாவில் இருந்து 75 சதவீதம் பொருட்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகின்றன. இதற்கிடையே கனடா பிரதமரின் அகதிகள் வரவேற்புக்கு அந்நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி கண்டனம்
டிரம்பின் ‘விசா’ தடைக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரின் பின்னணி மற்றும் மதம் அடிப்படையில் இது போன்று தாக்குதல் நடத்துவது நியாயமற்றது. ஜெனிவா அகதிகள் சட்டம் போர் நடைபெறும் நாடுகளின் அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago