முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்திமாலை அணியும் விழா

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருநெல்வேலி

செங்கோட்டை,

செங்கோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்திமாலை அணியும் விழா சிறப்பாக நடைபெற்றது.

செங்கோட்டையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்திமாலை அணியும் விழா சிறப்பாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி மாலை அணிந்து கொண்டனர். அதுசமயம் மழைவளம் சிறக்க வேண்டி சக்திபீடத்தில் வைத்து குருவழிபாடு நடைபெற்றது. இவ்வழிபாட்டினை சக்திபீட திருப்பணி தலைவர் சித்ராகுருசாமி தொடங்கிவைத்தார். தொடர்ந்து ஆன்மீக மேடை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஆலோசகர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இளைஞர் அணி பொறுப்பாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் குட்டியப்பா சிவசைலத்தை சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக சக்திமாலை அணிவித்து பொருட்கள் வழங்கினார். பாண்டிச்சேரி இந்திராகாந்தி, திருப்பூர் சிவானந்தம் ஆகியோர் ஆன்மீக சிறப்புரை நடத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கணேசன், உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். சக்திபீட பொருளாளர் தனுஷ்கோடி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியினை வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான் தொடங்கிவைத்தார். சக்திபீட தலைவர் சக்தி சங்கரநாராயணன், மன்றத்தலைவர் சித்ரா சங்கர், விஜிஜய்யப்பன், பழனியம்மாள், ரமேஷ், மனோ, சுதன், மணிவண்ணன், சூர்யா, மதி, குமரன் ஆகியோர் குருவழிபாட்டிற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago