முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

கடலூர்.

 கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர்  நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 305 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், கலெக்டர்  மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று 2015-16 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண் பெற்ற 20 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.51,000-மதிப்பிலான காசோலைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.45,600- (தலா ரூ.4,560-); மதிப்பிலான இலவச சலவை இயந்திரங்களையும்  வழங்கினார்.

மேலும், கலெக்டர் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் மூலம் 2014-15-ம் ஆண்டிற்கான கல்லூரிகள் இணை விளையாட்டு மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தேசிய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் தமிழகம் முழுவதும் வெற்றிபெற்ற 24 கல்லூரிகளில் 265 வீரர்வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.  அதில் நமது கடலூர் மாவட்டத்திலிருந்து 1 பல்கலைக்கழகம் மற்றும் 2 கல்லூரிகளிலிருந்து  தேர்வு செய்யப்பட்ட 40 வீரர்வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கிய ரூ.1,30,000- மதிப்பிலான ஊக்கத்தொகைகளை வழங்கினார். 

இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்