தோகைப்பாடி கிராமத்தில் சிறப்பு கிராம சபாக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தோகைப்பாடி கிராமத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் தொடர்பாக, தொடுதல் (ஸ்பர்ஷ்) தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு கிராம சபாக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமையில்  நடைபெற்றது.

தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற கிருமியால் உருவாகிறது.  இந்த தொற்று நோய் கிருமி தாக்கம் உள்ளவர்கள் இருமல் மற்றும் தும்மல் வழியாக காற்றின் மூலம் பரவுகிறது.  இந்திய அளவில் கூட்டு மருந்து சிகிச்சை ஆரம்பிக்கும் முன் பாதிக்கப்பட்டவர்கள் 57.60ஃ10000 ஆக 1983-ல் இருந்தது.  கூட்டு மருந்து சிகிச்சைக்கு பிறகு 0.66ஃ10000க்கு குறைந்துள்ளது. இக்கூட்டத்தில், நோய் பாதிப்பு உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து மருத்துவர் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக்கொள்வது எனவும், நோய் பாதிப்பு இருந்தும் அது பற்றி தெரியாமல் இருக்கும் நம் ஊரை சேர்ந்தவர்கள் உடன் சிகிச்சை பெற ஏற்பாடு செய்வது எனவும், நோய் பாதித்து ஊனம் ஏற்பட்டவர்களை அரவணைப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முழு மனதோடு அர்ப்பணிப்புடன் செய்வது எனவும், தொழுநோயால் ஊனம் ஏற்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஃ அரசு மருத்துவமனைகள் வழியாக பெற ஏற்பாடு செய்து தருவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில்,“தொழுநோய் மற்ற நோய்களைப் போல மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற ஒரு வகை கிருமியினால் உருவாகிறது என்பதை நான் அறிவேன். உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல் நோய் உள்ளவர்கள் அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்கள் எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வேன்.  அவர்களை அன்பாகவும் எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன்.  தொழுநோய் குணமாகக் கூடியது.  ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைப்பாட்டை ஏற்படுத்தாது, அங்கஹீனத்தை தடுக்கம்.  தொழுநோயாளிகளை ஒதுக்கக்கூடாது போன்ற விபரங்களை அண்டை அயலாருக்குத் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன்.  தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடனும் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.”என்ற தொடுதல் (ஸ்பர்ஷ்) - தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமதாஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (தொழுநோய்) தர்மலிங்கம், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, விழுப்புரம் வட்டாட்சியர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: